பெங்கரூளுவில் இருந்து வந்த போதை மாத்திரைகள்.. புதுக்கோட்டை பீச் ஓரத்தில் நடந்த ஷாக் சம்பவம்..!!!

Author: Udayachandran RadhaKrishnan
18 March 2024, 10:55 am

பெங்கரூளுவில் இருந்து வந்த போதை மாத்திரைகள்.. புதுக்கோட்டை பீச் ஓரத்தில் நடந்த ஷாக் சம்பவம்..!!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோட்டைப்பட்டினம் கடற்கரை பகுதியில் சிலர் போதை மாத்திரைகளை வெளி மாநிலங்களில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்து வருவதாக கோட்டைப்பட்டினம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற காவல்துறையினர் கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த நான்கு பேரை பிடித்து விசாரணை செய்த பொழுது அவர்கள் அதே கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த அப்துல் அகமது காஜாமைதீன், முகமது அப்துல்லா, ஷேக் அப்துல்லாஹ்,அப்துல் ரகுமான் என்பதும் அவர்கள் 3000 ரூபாய் மதிப்புடைய 10 போதை மாத்திரைகளை ரகசியமாக வைத்து விற்பனை செய்து வந்ததையும் கண்டறிந்தனர்.

போதை மாத்திரைகளை கைப்பற்றி, அந்த நான்கு பேரையும் கைது செய்த கோட்டைப்பட்டினம் காவல்துறையினர் அவர்களை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணையில் அவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து இந்த போதை மாத்திரை வாங்கி வந்ததும், அதனை கோட்டைப்பட்டினம் பகுதியில் 3000 ரூபாய் அளவிற்கு விற்பனை செய்து வந்ததையும் அவர்கள் ஒப்புக்கொண்ட நிலையில் அந்த நான்கு பேரின் மீது வழக்கு பதிந்து மேலும் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

கோட்டைப்பட்டினம் கடற்கரை பகுதியில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வரும் செய்தி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Dhruv Vikram anupama parameswaran dating pictures viral on internet துருவ் விக்ரமுடன் டேட்டிங் சென்ற அனுபமா? இணையத்தை அதிரவைத்த அந்தரங்க புகைப்படம்…
  • Close menu