கருடன் படம் பார்க்க சென்ற நரிக்குறவர்களுக்கு அதிர்ச்சி.. வட்டாட்சியரிடம் புகார் : உடனே நடந்த ட்விஸ்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
1 June 2024, 4:55 pm

கடலூர் அண்ணா பாலம் அருகே உள்ள திரையரங்கில் கருடன் படம் வெளியான நிலையில் தியேட்டரில் படம் பார்க்க வந்த 20க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினருக்கு நிர்வாகம் டிக்கெட் கொடுக்க அனுமதி மறுத்தது.

அதனைத் தொடர்ந்து இது குறித்து புகார் அளிக்க கடலூர் கோட்டாட்சியரிடம் நரிக்குறவர்கள் வந்தனர். கோட்டாட்சியர் வேறு ஒரு மீட்டிங்கில் இருப்பதால் வட்டாட்சியர் பலராமன் இது குறித்து விசாரணை மேற்கொண்டார்.

கடலூர் புதுநகர் காவல் நிலைய போலீசாரும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். கடலூர் நியூ சினிமா திரையரங்கிற்கு நரிக்குறவர்களை அழைத்து வந்த வட்டாட்சியர் பலராமன் அங்கு டிக்கெட் வாங்கி அவர்களுக்கு வழங்கினார்.

மேலும் படிக்க: குமரியில் தியானத்தை நிறைவு செய்தார் மோடி… திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு மரியாதை!!

அந்த டிக்கெட்டை பெற்றுக் கொண்டு அடுத்த காட்சி படம் பார்ப்பதற்கு தற்பொழுது நரிக்குறவர்கள் காத்திருக்கின்றனர்.

  • kamal haasan ott streaming after 8 weeks கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?