சினிமாவில் இருந்து விலகும் நடிகர் நாசர்.? இணையத்தில் வேகமாக பரவும் காரணம்..!
Author: Rajesh30 June 2022, 6:46 pm
தமிழ் சினிமாவின் ரஜினி, கமல் பல ஜாம்பவான்களை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் கே.பாலச்சந்தர் தான், தனது கல்யாண அகதிகள் என்ற படம் மூலமாக நாசரை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார். நாசர் நடிப்பில் வெளிவந்த, தேவர் மகன், குருதிப்புனல், பம்பாய் உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவிற்கு தனித்துவமான வில்லன் நடிகர் என தனக்கென தனி அடையளாம் பதித்தவர்.
இவர் நடிகர் என்பதை தாண்டி டைரக்டர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், டப்பிங் கலைஞர், நடிகர் சங்க தலைவர், அரசியல்வாதி என பல முகங்களைக் கொண்டு விளங்குகிறார். இவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாசர். அதிலும், பாகுபலி படத்தில் இவரது நடிப்பை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவிற்கு இன்றுவரை தன்னுடைய எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்களை கட்டி போட்டவர்.
இந்நிலையில் நடிப்பில் இருந்து விலக நாசர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தொற்று காலத்தில் இதய பாதிப்புகளால் நாசர் கடுமையாக அவதிப்பட்டு, அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், தன்னுடைய உடல்நிலையை கருத்திக் கொண்டு தான் நாசர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் திரையுலகினர் மட்டுமின்றி அவரது ரசிகர்களும் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். அதே சமயம் நாசரின் உடல்நிலை விரைவில் குணமடைந்து, அவர் மீண்டும் நடிப்பிற்கு திரும்பி வர அனைவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.