‘ஏன் இன்னும் பஸ்ஸ எடுக்கல’… பேருந்து நிலையத்தில் தாக்கிக் கொண்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் ; அதிர்ச்சி வீடியோ!!
Author: Babu Lakshmanan11 March 2024, 8:12 pm
திண்டுக்கல் அருகே நத்தம் பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்து ஓட்டுனர்கள் சரமாரியாக தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பஸ் நிலையத்ததில் இருந்து திண்டுக்கல், மதுரை, காரைக்குடி, கோயம்புத்தூர், திருச்சி, திருப்பூர், புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட பல்வேறு வழிதடங்களுக்கு தினந்தோறும் பஸ்கள் இயக்கபட்டு வருகிறது.
இந்த நிலையில், புதுக்கோட்டை பணிமலையில் இருந்து புதுக்கோட்டை -திண்டுக்கல் நோக்கி செல்லும் நத்தம் பணிமனைக்கு வந்தது. அப்போது, பணிமனையில் இருந்து நத்தத்திலிருந்து- திருப்பூருக்கு செல்ல வேண்டிய பேருந்து, அங்கிருந்து எடுக்காமல் நின்று கொண்டிருந்தது.

இதனால் புதுக்கோட்டையில் இருந்த வந்த பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள், திருப்பூர் செல்ல கிளம்பிய அரசு பேருந்தை தடுத்து நிறுத்தி கேள்வி எழுப்பி ஆபாசமாக திட்ட ஆரம்பித்தனர். இதனால் இரண்டு அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களிடையே தகராறு ஏற்பட்டது.
அதில், ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். மேலும், அங்கு வந்த மற்ற அரசு பேருந்து ஓட்டுநர்களும் சண்டையை விலக்கி விட்டனர். இந்த மோதலில் ஓட்டுநர்கள் சிறிய காயம் அடைந்தனர்.
இரண்டு பேருந்துகளையும் நத்தம் பஸ் நிலையத்தில் நிறுத்திவிட்டு, ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் நத்தம் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை பெற்றுக் கொண்டு நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர்.
நத்தம் பேருந்து நிலையம் நடுவில் பயணிகள் முன்னால் அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் அடித்துக்கொண்ட பயணிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .