தேசிய நல்லாசிரியர் விருது… தமிழகத்தில் இருந்து ஆசிரியர்கள் தேர்வு : ஆளுநர் தமிழிசை வாழ்த்து!!

Author: Udayachandran RadhaKrishnan
27 August 2023, 1:52 pm

2023-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவரும் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். அவர்களுக்கு புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தென் தமிழக மண்ணிலிருந்து இருவர் தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம், ஆசிரியர் அரசு ஆண்கள் பள்ளி காட்வின் வேதநாயகம் ராஜ்குமாருக்கும், தென்காசி மாவட்டம், கீழ்ப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசு பள்ளி ஆசிரியை மாலதிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 400

    0

    0