கன்டிஷன் போடும் நயன்தாரா..? இருப்பதை இழந்து விடாதீர்கள் என எச்சரிக்கை..!

Author: Rajesh
19 May 2022, 1:38 pm

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் படங்களை அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

கடைசியாக நயன்தாரா நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி இருந்தது, படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது.

இளம் நடிகர்கள் முதல் முன்னணி நடிகர்கள் வரை ஜோடியாகவும் நடித்து வருகிறார். இதனால் மார்க்கெட் சிறப்பாக இருப்பதால் ஓவராக கெத்து காட்டி வருவதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் நயன்தாராவை பலரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைத்து வருகின்றனர். இந்த பட்டத்தை அவருக்கு யார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் எல்லா படங்களிலும் இவர் பெயரை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்றுதான் போடுகின்றனர்.

சமீபத்தில் விஜய் சேதுபதி, சமந்தா ஆகியோர் உடன் நயன்தாரா இணைந்து நடித்திருந்த காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்திலும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்றுதான் போடப்பட்டது. அப்படி தன் பெயர் வருவதைத்தான் நயன்தாராவும் விரும்புகிறாராம்.

அது மட்டுமல்லாமல் எல்லா படத்திலும் அப்படித்தான் போட வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் கூறி வருகிறாராம். தற்போது இவர் சோலோ ஹீரோயினாக நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் O2, விரைவில் ஓடிடியில் வெளியாக இருக்கும் இந்தப் படத்திலும் அப்படித்தான் தன் பெயரை போட வேண்டும் என்று நயன்தாரா படக்குழுவினருக்கு தொல்லை கொடுத்து வருகிறாராம்.

ஆனால் படக்குழு இன்றுவரை அவர் கூறியதற்கு சம்மதம் கூறாமல் இழுத்தடித்து வருகிறார்களாம். நயன்தாரா இப்படி அடுத்தடுத்து தொல்லை கொடுத்து வருவது படக்குழுவினரை எரிச்சலடைய வைத்துள்ளது. பேருக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டு இருப்பதையும் இழந்து விடாதீர்கள் என்று அவரைப் பற்றி இப்போது திரையுலகில் பேசப்பட்டு வருகிறது

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!
  • Close menu