Cannes விழா..நயன்தாரா செல்லாதற்கு பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கா.?

Author: Rajesh
19 May 2022, 11:52 am

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் படங்களை அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

கடைசியாக நயன்தாரா நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி இருந்தது, படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது.

பிரான்சில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் ஒன்று கேன்ஸ் திரைப்பட விழா. 75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய சினிமா பிரபலங்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர். இந்த வருட விழாவில் நடிகை நயன்தாராவும் முதன் முறையாக கலந்துகொள்ள இருந்தார்.

ஆனால் நயன்தாரா திருமண வேலைகள் இருப்பதால் முதன்முறையாக கலந்துகொள்ள இருந்த கேன்ஸ் திரைப்பட விழா நிகழ்ச்சியை ரத்து செய்திருக்கிறார் என கூறப்படுகிறது.

  • AR Murugadoss about SIkandar movie remake of Thalapathy's Sarkar விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!