நயன்தாரா – விக்னேஷ் சிவனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல். !
Author: Rajesh30 June 2022, 12:11 pm
விக்னேஷ் சிவனும்,நடிகை நயன்தாராவும் கடந்த 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியதில் இருந்து காதலித்து வந்தனர். கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 9 ஆம் தேதி இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்டமாக நடைபெற்றது.
சிவப்பு நிற உடையில் நடிகை நயன்தாராவும்,பொன்னிற ஆடையில் விக்னேஷ் சிவனும் இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தாய்லாந்து நாட்டிற்கு தேனிலவுக்காக சென்று இருந்த நிலையில் அவர்கள் இந்தியா திரும்பியுள்ளனர். இதனிடையே அவர்களின் சொத்துமதிப்பு குறித்தான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நயன்தாரா சொத்து மதிப்பு 165 கோடி ரூபாய்.விக்னேஷ் சிவனின் சொத்து மதிப்பு 50 கோடி ரூபாய் எனவும் இருவரின் மொத்த சொத்து மதிப்பு 215 கோடி என கூறப்படுகிறது.

ஃபோர்ப்ஸ் பட்டியலில் விக்னேஷ் சிவனின் சொத்து மதிப்பு 33 மில்லியன் டாலர் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. விக்னேஷ் சிவனுக்கு சொந்தமாக 20 கோடி ரூபாய் மதிப்பில் வீடு ஒன்றும் உள்ளது. இதுமட்டுமில்லாமல் நயன்தாரா – விக்னேஷ் சிவன் பெயரில் போயஸ் கார்டனில் ஒரு வீடும் உள்ளது என்றும் கூறப்படுகிறது.
நயன்தார ஒரு படத்தில் நடிப்பதற்கு ரூபாய் 10 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.மேலும் விளம்பரங்களில் நடிக்க 5 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார். நயன்தாராவுக்கு ரூபாய் 100 கோடி வரை அசையா சொத்துக்கள் உள்ளது. ஹைதராபாத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பில் சொந்தமாக ஒரு வீடு உள்ளது.சென்னையில் ஒரு வீடும் உள்ளது.
நடிகை நயன்தாரா காஸ்மெடிக் ரீடெய்ல் நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாகவும், இதில் உலகின் பிரபலமான லிப்ஸ்டிக் தயாரிப்புகள் அனைத்தும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் சாய் வாலே ரெஸ்டாரண்ட் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் ஏஞ்சல் முதலீட்டாளராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.