லட்சம் பேருக்கு கல்யாண விருந்து.? – நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி ஏற்பாடு செய்திருப்பதாக தகவல்.!

Author: Rajesh
9 June 2022, 10:13 am

திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் நயன்தாராவின் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் பலரும் காத்து இருந்த நிலையில், இன்று அவரது நீண்ட நாள் காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனை மணம் முடித்தார். நானும் ரவுடி தான் படத்தின் மூலம் காதலர்களாக மாறிய இந்த ஜோடி கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு மேல் உறவில் இருந்து வந்த நிலையில் தற்போது கணவன் மனைவியாக மாறியுள்ளனர்.

திருமண விழாவிற்கு நெருங்கிய உறவினர்கள், திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர் மேலும் இந்த காதல் ஜோடியின் திருமணம் நடைபெறும் இந்த தினத்தில் தமிழகத்தில் சுமார் 1 லட்சம் நபர்களுக்கு மதிய நேரத்தில் கல்யாண விருந்து கொடுக்கும் விதமாக உணவளிக்க ஏற்பாடு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களிலும், திருவண்ணாமலை உள்ளிட்ட சில முக்கியமான கோயில்களிலும் உணவளிக்க நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி ஏற்பாடு செய்து இருப்பதாக தெரிகிறது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 735

    0

    0