மீண்டும் ஒரே படத்தில் நயன்தாரா – சமந்தா.? அந்த மாதிரியான கதையா.? வெளிவந்த தகவல்..!

Author: Rajesh
26 May 2022, 7:03 pm

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்கள் தான் நயன்தாரா மற்றும் சமந்தா. சமீபத்தில் இருவரும் இணைந்து நடித்த ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. படம் தோல்வி படம் இல்லை என்றும் போட்ட முதலீட்டை எடுத்து விட்ட சுமாரான லாபம் கொண்ட படம் என்றும் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள ‘அஜித் 62’ படத்தின் படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளார். இந்த நிலையில் தற்போது, இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படம் குறித்த சுவாரஸ்ய தகவல் வெளிவந்துள்ளன. அதாவது பேய் கதையில் நடிக்க இருக்கின்றனர். புதிதாக உருவாகவுள்ள பேய் படத்தில் நடிக்க நயன்தாரா மற்றும் சமந்தாவிடம் கேட்டுள்ளார்களாம்.

இதில் நயன்தாரா அல்லது சமந்தா இருவரில் ஒருவர் கண்டிப்பாக இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. நயன்தாரா இதற்குமுன் மாயா எனும் பேய் படத்திலும், சமந்தா யு டர்ன் படத்திலும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 1154

    11

    6