நயன்தாராவுக்கு கோல்டன் விசா கிடைக்காதற்கு இப்படி ஒரு காரணமா..? வெளியான அதிர்ச்சி தகவல்..!

கோலிவுட் சினிமாவில் அதிக வயதானாலும் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் எப்போது திருமணம் நடக்கும் என்று வழிமேல் விழிவைத்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். இந்த சூழ்நிலையில் நயன்தாராவிடம் தனக்கு நடந்த ஒரு அவமானத்தை எண்ணி விக்னேஷ் சிவனிடம் கூறி அழுதுள்ளாராம்.

தமிழ் சினிமாவில் பல நட்சத்திரங்களுக்கு சவுதி, அரேபியா கோல்டன் விசா வழங்கி வருகிறது. கோல்டன் விசா இருப்பவர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகிறது. இதனால் பல பிரபலங்களுடன் கோல்டன் விசா வாங்குவதற்கு முயற்சி செய்து வருகின்றனர்.

சினிமா பிரபலங்கள் மட்டுமன்றி பல முதலீட்டாளர்கள், அறிவியல் அறிஞர்கள் போன்ற அனைவருக்கும் இந்த கோல்டன் கொடுக்கப்படுகிறது. ஷாருக்கான், மோகன்லால், மம்மூட்டி, பிரித்விராஜ், துல்கர் சல்மான், திரிஷா போன்றோருக்கு கோல்டன் விசா கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவுக்கு இதுவரை கோல்டன் விசா வழங்கப்படவில்லை. இதற்காக நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் தற்போது வரை அவருக்கு இந்த விசா கிடைக்கவில்லை.

நயன்தாராவுக்கு கோல்டன் விசா கிடைக்காததற்கு காரணமாக பார்க்கப்படுவது மத ரீதியான பிரச்சினைதான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாரா கிறிஸ்டின் மதத்தை சேர்ந்தவர். ஆனால் தற்போது தன் காதலனுடன் இந்து கோயிலுக்கு சென்று வருகிறார். அதனால் இவர் எந்த மதம் என்பது உறுதியாக தெரியாததால் இவருக்கு கோல்டன் விசா வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் சின்ன சின்ன பிரபலங்களுக்கு கூட கோல்டன் விசா மிகவும் சுலபமாக கிடைக்கிறது. ஆனால் நயன்தாராவால் எல்லாவற்றையும் வாங்கும் அளவிற்கு வசதி இருந்தாலும் கோல்டன் விசா கிடைக்கவில்லை என்ற ஏமாற்றத்தில் உள்ளாராம்.
இந்நிலையை விக்னேஷ் சிவன் தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறாராம். எப்படியாவது நயன்தாராவுக்கு கோல்டன் விசாவை பெற்று தரவேண்டும் என முழு வீச்சில் போராடி வருகிறார் விக்னேஷ் சிவன்.

UpdateNews360 Rajesh

Recent Posts

படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!

படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…

6 hours ago

நீட் தேர்வுக்கான அனைத்துக்கட்சி கூட்டம் ஒரு நாடகம்.. இபிஎஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…

6 hours ago

அட்லீ-அல்லு அர்ஜுன் படத்துக்கு இவர்தான் மியூசிக்கா? பிளாஸ்ட்டா இருக்கே!

பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…

6 hours ago

இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?

தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…

8 hours ago

சுயமரியாதை இருந்தால் ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியே போங்க : ஆர்எஸ் பாரதி காட்டம்!

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…

9 hours ago

This website uses cookies.