நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமண பிரத்யேக புகைப்படங்கள் இதோ..!

Author: Rajesh
9 June 2022, 4:14 pm

கோலிவுட்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரின் திருமண கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. அதிகாலை முதலே இவர்களது திருமணத்திற்கு பல பிரபலங்கள் வர தொடங்கினர். இதில் மணிரத்னம், ரஜினிகாந்த், விஜய் சேதுபதி மற்றும் பொன்வண்ணன் போன்ற நட்சத்திரங்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.

இதனையடுத்து காலை 10.25 மணிக்கு நடிகை நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் தாலி கட்டினார். ஜோடியின் வரவேற்பு விழா ஜூன்-10ம் தேதியான நாளைய தினம் நடைபெறுகிறது. திருமண பந்தத்தில் இணைந்துள்ள விக்கி – நயன் ஜோடிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதுவரை இந்த இருவரை காதலர்களாக பார்த்த பலரும், இவர்களை கணவன் மனைவியாக திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை பார்ப்பதில் ரசிகர்கள் பலரும் ஆர்வம் காட்டி வந்தனர். இந்த நிலையில் இணையத்தில் வெளியான சில புகைப்படங்கள் இதோ..!

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!