திருமணத்திற்கு பின், 6 மாத பிரிவு.. விக்னேஷ் சிவன் – நயன்தாரா எடுத்த முடிவுக்கு இது தான் காரணமா?

Author: Rajesh
2 June 2022, 3:26 pm

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் படங்களை அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார்.கடைசியாக நயன்தாரா நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி இருந்தது, படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது.

பிரான்சில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கூட, நயன்தாரா திருமண வேலைகள் இருப்பதால் நிகழ்ச்சியை ரத்து செய்தார் என கூறப்பட்டது. இதனிடையே, மாதம் 9ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில் அவர்கள் இருவம் கார் மூலம் விக்னேஷ் சிவனின் சொந்த ஊருக்குச் சென்றனர். பின்னர் இருவரும் கோயிலில் நேர்த்திகடனை செலுத்தினர்.

திருமணத்திற்கு பின் இருவரும் குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணத்தில் இருப்பதால் நடிகை நயன்தாரா ஆறுமாத கர்ப்பப்பை ட்ரீட்மெண்ட் எடுக்க கேரளாவிற்கு செல்ல இருக்கிறார். எனவே, இந்த ஆறு மாதம் விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் ஒரே இடத்தில் தங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

குழந்தை பெற்றுக் கொள்வதற்கான ட்ரீட்மெண்ட் எடுப்பதால் இருவரும் ஒரே இடத்தில் தங்க கூடாது என்று சம்பந்தப்பட்ட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அவரது கர்ப்பப்பையில் ஏற்பட்டு இருக்கும் பிரச்சனைகளை சரி செய்த பின்னர் இருவரும் குழந்தை பெற்றுக் கொள்ள தயார் ஆவார்கள் என்று கூறப்படுகிறது.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!