நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம்.. திருப்பதியில் அனுமதி மறுக்கப்பட்டது ஏன்.? வெளியான காரணம்.!
Author: Rajesh30 May 2022, 11:25 am
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் படங்களை அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
கடைசியாக நயன்தாரா நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி இருந்தது, படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது.
பிரான்சில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கூட, நயன்தாரா திருமண வேலைகள் இருப்பதால் நிகழ்ச்சியை ரத்து செய்தார் என கூறப்பட்டது.
இதனிடையே, மாதம் 9ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில் அவர்கள் இருவம் கார் மூலம் விக்னேஷ் சிவனின் சொந்த ஊருக்குச் சென்றனர். பின்னர் இருவரும் கோயிலில் நேர்த்திகடனை செலுத்தினர்.
திருப்பதியில் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். இதற்காக திருப்பதி தேவஸ்தானத்தில் அனுமதி வழங்கும் பணியில் அவர்களது தரப்பினர் ஈடுபட்டனர் மொத்தம் 150 குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால் திருப்பதியில் அனுமதி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது, மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருப்பதி தேவஸ்தானம் இப்பொழுது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் காரணத்தினால் அது இயலாத காரியம் என அனுமதி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் திருப்பதி தேவஸ்தானத்தில் நடக்க இருந்த கல்யாணத்தை தற்பொழுது மகாபலிபுரத்தில் இருக்கும் விடுதி ஒன்றில் நடந்த நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் முடிவு செய்துள்ளனர் மேலும் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.