பக்காவா ரூட்டு போட்ட விக்னேஷ் சிவன்.. வசமாக சிக்கிக் கொண்ட நயன்தாரா..?

Author: Rajesh
29 April 2022, 11:50 am

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். மேலும், இவர்கள் இருவரும் அவ்வப்போது வெளிநாடு சுற்றுலா செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகும். இந்நிலையில் இவர்கள் இருவருமே தங்களது வேலையில் மிகவும் பிசியாக இருந்தனர்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் வீட்டில் கல்யாணத்துக்கு மிகவும் அவசரப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இதைப்பற்றி விக்னேஷ் சிவனும் நயன்தாராவிடம் பலமுறை கேட்டிருக்கிறார். ஆனால் தற்போது மார்க்கெட் உள்ள போதே சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார் நயன்தாரா.

இதனால் திருமண தேதியை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார். இப்பொழுது இருவரும் சேர்ந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற ப்ரொடக்ஷன் கம்பெனி நடத்தி அதிலும் கல்லா கட்டி வருகின்றனர். இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் காத்துவாக்குல 2 காதல்.

இப்படத்தில் நயன்தாரா குடும்பப்பாங்கான பெண்ணாகவும், சமந்தா கிளாமாகவும் நடித்திருந்தனர். இந்நிலையில் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. அதுவும் இப்படத்தில் சமந்தாவுக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தாலும் நயன்தாராவுக்கும் சுத்தமாக ஒரு பிளஸ் பாயிண்டும் கிடையாது.

இதனால் நயன்தாராவின் சினிமா கெரியரை இந்த படத்தின் மூலம் குறைத்துள்ளார் விக்னேஷ் சிவன். அவரை திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் தான் இப்படி ஒரு கதாபாத்திரத்தை நயன்தாராவிற்கு கொடுத்துள்ளார் என்றும் இதனால் நயன்தாராவின் நடிப்புக்கு முட்டுக்கட்டை போட்டுயுள்ளார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
மேலும் எது எப்படியோ நயன்தாராவுக்கு சீக்கிரம் திருமணம் ஆன சரிதான் என்கிறார்கள் நயன்தாராவின் ரசிகர்கள். இதனால் இந்த ஆண்டு இறுதிக்குள் விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் நடைபெற உள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 1540

    0

    2