நாசரேத் துணை மின் நிலைய அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மின்வாரிய அதிகாரி : சடலத்தை பார்த்து பயந்தோடிய ஊழியர்கள்… போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
23 June 2022, 1:42 pm

தூத்துக்குடி : நாசரேத் துணை மின் நிலையத்தில் அதிகாரி வெட்டிக் கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை கே.டி.சி, நகரைச் சேர்ந்தவர் பூவையா மகன் ஆனந்தபாண்டி (வயது 51). இவர் தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தில் உள்ள துனை மின் நிலையத்தில் லைன் இன்ஸ்பெக்டராக வேலைபார்த்து வருகிறார்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பணியில் இருந்துள்ளார். அடுத்த நாள் புதன்கிழமை காலையில் பூமிநாதன் என்பவர் பணிக்கு வந்துள்ளார். அப்போது ஆனந்தபாண்டி அறையில் படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பூமிநாதன் நாசரேத் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் பட்டாணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

ஆனந்த பாண்டியின் தலை, முதுகு உட்பட உடலில் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தது. அவரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. அவரை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடல் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்தை சாத்தான்குளம் டிஎஸ்பி அருள் நேரில் பார்வையிட்டார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 643

    0

    0