இவர்தான் உண்மையான லக்கி பாஸ்கர்.. ஒரு கோடியில் வீடு.. யார் இவர்?

Author: Hariharasudhan
4 December 2024, 1:10 pm

சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை வழக்கில் கைதான என்சிபி அதிகாரி ரூ.1 கோடியில் வீடு வாங்கியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சென்னை: சென்னை, வடபழனியில் சிலர் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் விற்பதாக சென்னை போலீசாரின் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. இந்தத் தகவலின் அடிப்படையில், வடபழனியில் கடந்த நவம்பர் 28ஆம் தேதி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த கொளத்தூரைச் சேர்ந்த சுரேந்திரநாத் என்பவரைப் பிடித்து போலீசார் விசாரித்தனர். இந்த விசாரணையில், அவர் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் விற்பது தெரிய வந்தது மட்டுமல்லாமல், அசோக் நகர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றும் ஜேம்ஸ் என்பவரும் இவருடன் சேர்ந்து மெத்தபெட்டமைனை செல்போன் செயலி மூலம் விற்று வருவது தெரிய வந்துள்ளது.

methamphetamemes drug sales arrest in Chennai

இதனையடுத்து சுரேந்திரநாத் மற்றும் காவலர் ஜேம்ஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னையில் மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் (NCB) பணியாற்றும் முதல்நிலைக் காவலர்கள் ஆனந்தன் மற்றும் சமீர் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: சூடுபிடிக்கும் டிஜிட்டல் அரஸ்ட்.. பின்னணியில் சீனர்கள்.. நடப்பது என்ன?

இதனையடுத்து, அவர்கள் இருவரையும் போலீசார் தனியாக அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், இருவரும் தங்களுக்கு கிடைத்திருக்கும் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் மூலம், பெங்களூருவில் இருந்து மெத்தபெட்டமைனை வாங்கி காவலர் ஜேம்ஸிடம் கொடுத்திருப்பது தெரிய வந்தது.

methamphetamemes drug sales arrest NCB Officer

மேலும், ஜேம்ஸும், சுரேந்திரநாத்தும் சேர்ந்து செல்போன் செயலி மூலம் அதனை விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து காவலர்கள் ஆனந்தனையும், சமீரையும் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணயில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்து உள்ளன.

இதன்படி, கைது செய்யப்பட்ட மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவலர் ஆனந்தின் வங்கிக் கணக்கில் 45 லட்சம் ரூபாய் இருப்பது கண்டிபிடிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல், ஒரு கோடி ரூபாய்க்கு வீடு ஒன்றை வாங்கி இருப்பதும் தெரிய வந்து உள்ளது. இதனை, அவர் போதைப்பொருள் விற்பனை மற்றும் விற்பனை செய்பவர்களிடம் போலீஸ் எனக் கூறி மிரட்டியும் பெற்ற பணத்தால் வாங்கியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  • Pushpa 2 Release and Reviews புஷ்பா 2 படத்தின் முதல் விமர்சனம்..பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
  • Views: - 65

    0

    0

    Leave a Reply