தூய்மை இந்தியா திட்டப்பணியில் என்சிசி மாணவர்கள்: பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி..!!

Author: Rajesh
1 April 2022, 9:36 am

கோவை: உக்கடம், சுங்கம் வாலாங்குளம் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் என்சிசி மாணவர்கள், அந்தபகுதியில் உள்ள குப்பைகளை அகற்றும் பணிகளில் இன்று ஈடுபட்டனர்.

கோவை உக்கடம், சுங்கம், வாலாங்குளம் பகுதியில் சாலையோரங்களில் போடப்பட்டுள்ள குப்பைகளை அகற்றவும், பொது இடங்களை தூய்மையாக வைத்திருப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, என்சிசி மாணவர்களுடன், இரானுவ வீரர்களும் இனைந்து கைகோர்த்து சுத்தம் செய்தனர்.

இந்த பணிகளை, 4 தமிழ்நாடு பெட்டாலியன் என்சிசி கர்னல் J P S சவான் மற்றும், மேஜர் ஆபிசர், M D கண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினார்.

சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், மூன்று குழுக்களாகப் பிரிந்து, உக்கடம் வாலாங்குளம், சுங்கம் பகுதியில் குப்பைகளை அற்றுதல், பிளாஸ்டிக் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி என மூன்று பிரிவுகளாக பிரிந்து பொதுமக்களிடையே இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி