NDA போட்டியிலேயே இல்ல… நாம் தமிழர் பெரிய கட்சியா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
16 June 2024, 6:48 pm

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தேர்தல் சுதந்திரமாக நியாயமாக நடக்காது என்பதால் தேர்தலை புறக்கணிக்கிறோம். இப்போதைக்கு விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக முடிவெடுத்து இருக்கிறோம்.

இது பற்றி மட்டும் தான் பேச முடியும். எதார்த்த நிலையை புரிந்து நாங்கள் முடிவெடுத்து இருக்கிறோம். என்டிஏ, நாம் தமிழர் கட்சியை ஒரு பெரிய கட்சியாக எடுத்துக்கொள்ள முடியாது. அதிமுக தான் பெரிய கட்சி. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேமுதிக நிலைப்பாடு குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி இருப்பார் என்று கூறினார்.

  • Simran Slams Actress Talked About Aunty Roles Aunty கேரக்டருக்கு இது எவ்வளவோ மேல்… சிம்ரனை காயப்படுத்திய நடிகை இவரா?