சீமான் மீது 60 வழக்குகள் பதிவு.. 11 மாவட்டங்களில் புகார்!

Author: Hariharasudhan
10 January 2025, 11:56 am

பெரியார் குறித்த சர்ச்சை கருத்து கூறியதற்கு எதிராக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் சீமான் மீது 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை: சமீபத்தில் கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், “உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோ, மகளோ, சகோதரியோ, அவர்களுடன் உறவு வைத்துக் கொண்டு சந்தோஷமாக இரு என்று கூறியது தான் பெண் உரிமையா?” என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், திராவிடர் கழகத்தினர், திமுகவினர் உள்பட பெரியாரிய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், சீமானின் பெரியார் குறித்த சர்ச்சை கருத்துக்கு எதிராக தமிழ்நாட்டில் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக, கடலூர், சேலம், மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், இதுவரை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Cases against Seeman in TN

இதனிடையே, இது குறித்து கனிமொழி எம்பி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “பகுத்தறிவு – சமத்துவம் – பெண் விடுதலை, அறிவியல் வளர்ச்சி, தமிழ்நாட்டின் முன்னேற்றம் எனும் முற்போக்கு சிந்தனைகளை முன்வைக்கும் அனைவருக்கும் தந்தை பெரியாரே தலைவர். அதற்கு எதிரான கருத்தியல் கொண்டவர்கள் அவரை எதிர்த்து எதிர்த்து ஓய்ந்து போகட்டும். சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டுத்தான் திருந்துவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இந்தி மொழி குறித்து கிரிக்கெட் வீரர் அஸ்வின் பரபரப்பு பேச்சு.. கல்லூரி பட்டமளிப்பு விழாவில் காரசாரம்!

அதேபோல், “சனாதன சக்திகள் பேசும் பிற்போக்கு அரசியலுக்குத் துணைநிற்கும் வகையில், இவர்கள் சமூகநீதி கோட்பாட்டு அரசியலின் அடையாளமாக விளங்கும் தந்தை பெரியாருக்கு எதிரான தாக்குதல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்” என விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை வாயிலாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

  • Aamir Khan Quit Smoking for Son மகனுக்காக அதை பண்ண ரெடி…பட விழாவில் அமீர் கான் பரபர பேச்சு..!
  • Views: - 54

    0

    0

    Leave a Reply