தமிழகம்

பீகாரில் இருந்து வியூகம் வகுக்க ஒருத்தர் தேவையா? உங்களுக்கு மூளை இல்லையா? சீமான் சாடல்!

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும் போது பாதுகாப்பு கேட்பவர்களுக்கு, பாதுகாப்பு என்பது தேவைப்படுகிறது அதனால் அனைவரும் கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள்.

எங்களுக்கு தேவையில்லை அதனால் நாங்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. நான் மக்களுக்காக வந்திருக்கிறேன் அதனால் நான் தான் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். எனக்கு எதற்கு பாதுகாப்பு என்றுதான் காவலர்களிடம் நான் கேட்பேன்.

விஜய் போன்ற ஒரு புகழ்பெற்ற நடிகருக்கு பாதுகாப்பு தேவை தான், அதனால் அவர் பாதுகாப்பு கேட்டு வாங்கிக் கொண்டார் என்று கூறினார்.

அண்ணாமலை குண்டுவெடிப்பு நினைவஞ்சலி கூட்டத்தில் பேசும்போது பாஷாவை அப்பா என்று சீமான் அழைத்தார் என்று குற்றச்சாட்டு முன்வைத்தார் என்ற கேள்விக்கு, குஜராத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றவரை இவர் எப்படி பார்க்கிறார்?, குஜராத்தில் நடந்த கலவரத்தில் இறந்தவர்களுக்கு அப்பா அம்மா இருக்கிறார்களா? இல்லையா?, ஈழத்தில் இறந்தவர்களுக்கு அப்பா அம்மா இல்லையா?, அவர்களைப் பற்றி எல்லாம் உங்களின் கருத்து என்ன?. அந்த இலங்கை இப்போது உங்களுக்கு நட்பு நாடாக இருக்கிறதே எப்படி?..

மணிப்பூர் கலவரத்தில் கொன்று ஒழிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை என்ன?, நிர்வாணப்படுத்தி வீதியில் அழைத்துக் கொண்டு போய், தீ வைத்து கொளுத்தினார்களே அவர்கள் யார்?, கோவை குண்டுவெடிப்பை பற்றி பேசுபவர்கள் ஒரு முறையாவது குஜராத்தை பற்றி பேசுங்கள்..

ராஜீவ் காந்தி கொலை பற்றி பேசுகிறவர்கள், அவர்களால் அனுப்பப்பட்ட ராணுவம் எங்களுடைய தாய் நிலத்தில் செய்த கொடுமைகளை பற்றியும் பேசுங்கள்.. என் இன மக்களுக்கு செய்த பேரழிவைப் பற்றியும் பேசுங்கள்.. நீங்கள் ஓட்டை பொறுக்குவதற்கு பேசுகிறீர்களா? இல்லை நான் பேசுகிறேனா?..

அல்லாஹ் மீது ஆணையாகச் சொல்கிறேன் இதுவரை எனக்கு இஸ்லாமிய பெருமக்கள் ஓட்டு போட்டது கிடையாது. நான் ஓட்டுக்காக நிற்கிறேன் என்றால் இதை பேசி இருக்கவே மாட்டேன்.

நான் நாட்டுக்கானவன் மண்ணுக்கானவன் மக்களுக்கானவன், என் மரணம் கூட எனக்கு வலிக்காது. ஏனென்றால் நான் பிறவி கடனை செய்து கொண்டிருக்கிறேன். என்னுடைய முன்னோர்கள் கூட எந்த பலனையும் எதிர்பார்க்காமல் தான் இறந்து போயிருக்கிறார்கள்.

நீங்கள்தான் ஓட்டை சந்தையாக்கி இருக்கிறீர்கள். வாக்கு விற்பனை செய்யும் சந்தையாக முழுமையாக மாற்றி விட்டீர்கள்.. நான் ஏதாவது கூறினால் என்னை கைக்கூலி என்று கூறுவது, போட்டு பிச்சை என்று சொல்வது, எங்களை பிச்சை எடுக்கிறீர்கள் என்று சொன்னால் உங்களை என்ன கூறுவது… நீங்கள் பேசுவது எல்லாம் அநாகரிகமானது.. நான் சிறையில் இருக்கும் பொழுது இருந்து அவரை அப்பா என்று தான் அழைப்பேன்..நீங்கள் அதைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

குற்றச் செயல்கள் நடக்கிறது என்றால் அதை தவிர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிங்கள். வரும் காலங்களில் இது போன்ற குற்றச் செயல்கள் நிகழாமல் இருக்க தலைவர் பெருமக்கள், முயற்சி செய்யுங்கள்.. மீண்டும் மீண்டும் அதையே கூறி சமூக இனக்கங்களை பிளந்து, கூறு போட்டு, மானுடத்தை கொன்றுவிட்டு, மதத்தை தூக்கி நிறுத்துவதால் எந்த பிரயோஜனமும் இல்லை.

அம்பேத்கர், தான் வாழுகிற நாட்டை விட, தான் சார்ந்து இருக்கிற மதமே பெரிது என இவர்கள் செயல்பட தொடங்குவார்கள் ஆனால், இந்த நாடு சுக்கு சுக்கு சிதறுவதை எவராலும் தடுக்க முடியாது என்று கூறியிருக்கிறார், நான் உங்களிடம் பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன் என்று கூறினார்.

அரசியல் லாபத்திற்காக பிரபாகரன் புகைப்படத்தை சீமான் பயன்படுத்துவதற்கு தடை விதித்து இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு,
பிரபாகரன் புகைப்படத்தை பயன்படுத்துவதால் அரசியல் லாபம் என்று கருதினால் அந்த பைத்தியங்கள் அவர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிரபாகரன் படத்தை அனைத்து கட்சிகளுமே போடலாம், ஆதாயம் இருந்தால் அனைவரும் அவரின் படத்தை தயவுசெய்து பயன்படுத்துங்கள் என்று கூறினார்.

என் தம்பி விஜயாவை எடுத்துக் கொள்ளலாம், ஜான் ஆரோக்கியசாமி என்ற தேர்தல் வகுப்பாளர் இருக்கிறார்.. அதன் பிறகு ஆதார் அர்ஜூனா என்ற வியூக வகுப்பாளர் இருக்கிறார். இவர்களுக்கெல்லாம் இந்த மண்ணில் பிறந்தவர்கள் இங்கு நடக்கும் பிரச்சனைகள் பற்றி தெரியும்.. ஆனால் பீகாரில் இருந்து ஒரு தேர்தல் வியூக வகுப்பாளர் வருகிறார் என்றால், உங்களுக்கெல்லாம் மூளை அறிவு என்று ஏதாவது இருக்கிறதா?, திருப்பரங்குன்றத்தில் ஒரு பிரச்சனை இருக்கிறது அல்லவா அது பிரசாந்த் கிஷோருக்கு தெரியுமா? அத்திக்கடவு அவிநாசி என்றால் தெரியுமா?, நொய்யல் ஆறு பிரச்சினை பற்றி தெரியுமா,?.. கருணாநிதி அம்மையார் ஜெயலலிதா வரை இந்த தேர்தல் வியூக வகுப்பாளர்கள் தேவைப்படவில்லையே?.. அதிமுக திமுகவின் மூத்த தலைவர்களை தாண்டி ஒரு வியூக வகுப்பாளர் தேவையா?.. இதே பிரசாந்த் கிஷோர் பீகாரில் நின்று strategy போட்டு ஜெயிக்கவில்லையே?… காசு கொடுத்தால் யார் வேண்டுமானாலும் வேலை செய்யலாம்.. தமிழ்நாட்டிலேயே மாபெரும் மேதைகள் இருக்கிறார்கள்… பீகாரில் இருந்து வரும் ஒருத்தனுக்கு அறிவு இருக்கிறது தமிழ்நாட்டில் இருப்பவனுக்கு இல்லையா… உலகத்திற்கு அறிவை கடன் கொடுத்தவன் தமிழன்.. எனக்கு கொஞ்சம் காசு கொடு இந்தியாவிற்கே strategy செய்து கொடுக்கிறேன்.. ஏன் அகில உலகத்திற்கே செய்து கொடுக்கிறேன் என்று கூறினார்.

நாம் இந்த நிலத்தின் மக்கள் இங்கு நிலம் சார்ந்த பிரச்சினைகள் என்ன என்பது தெரியும், நம்ம நிலையே அறிவார்ந்த மூத்த அறிஞர்கள் இருக்கிறார்கள், அதைத் தாண்டி எதுவும் தேவையில்லை என்று கூறினார்.

திராவிட மாடல் ஆட்சிக்கு தலைவர் ஸ்டாலின், ஆன்மீக ஆட்சிக்கு மாடல் சேக்கர்பாபு.. திராவிட கலை, திராவிட ஓவியம் என்று கூறிக் கொண்டிருந்தவர்கள் 5000 ஆண்டுக்கு முன்பே இரும்பை உருக்கி இருக்கிறார்கள் என்று தமிழ் தேசியம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் , என்ன செய்வது என்றே தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வெள்ளியங்கிரி மலைக்கு ஆசை ஆசையாக வந்த தூத்துக்குடி இளைஞர்..படி இறங்கும் போது சோகம்!

தென் கைலாயம் என பக்தர்களால் போற்றப்படும் கோவை வெள்ளியங்கிரி சிவன் கோவிலுக்கு ஏழு மலையலை கடந்து சென்று சாமி தரிசனம்…

5 minutes ago

துரை வைகோ விலகல்.. பின்னணியில் மல்லை சத்யா? அதிர்ச்சியில் வைகோ!

மதிமுக முதன்மை செயலாளர் பதவியில் இருந்து துரை வைகோ விலகியது அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி எம்பியாக உள்ள…

25 minutes ago

பொது வெளியில் அசிங்கப்படுத்திய கமல்ஹாசன்; ஒருத்தரை இப்படியா அவமானப்படுத்தனும்? அடப்பாவமே

விண்வெளி நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் தனது உலக நாயகன் என்ற பட்டத்தை துறந்தாலும் விண்வெளி நாயகன் என்று அவரை இப்போது…

57 minutes ago

75 வயது நடிகருக்கு மனைவியாக நடித்த 30 வயது நடிகை.. ஒப்புக்கொண்டது ஏன்? கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

விசித்திரமான வித்தியாசமான கதைகள் பெரிய திரையில் நடப்பதுண்டு. ஆனால் அரைச்ச மாவையே அரைக்கும் சின்னத்திரையில் வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல் உருவாகி…

2 hours ago

சூர்யாவுக்கு முன்னாடி SIX PACKS வெச்சவன் எவன் இருக்கான்? அனல் பறந்த நடிகரின் பேச்சு!

நடிகர் சூர்யா தற்போது ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு படம், கங்குவா 2…

2 hours ago

சிறுவன் அன்புக்கரசின் அன்புக்கு கட்டுப்பட்ட தமிழக அரசு.. இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர்!

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே P.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த ஜனவரி மாதம் 35 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக…

3 hours ago

This website uses cookies.