பலத்த மழைக்கு முறிந்து விழுந்த வேப்பமரம்.. கண்ணீர் விட்டு கதறி அழுத மூதாட்டி… நெகிழ வைக்கும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
24 April 2023, 4:32 pm

மதுரையில் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் முறிந்து விழுந்த வேப்பமரத்தை பார்த்து கண்ணீர் விட்டு அழத மூதாட்டியின் வீடியோ பார்ப்போரை நெகிழச் செய்துள்ளது.

மதுரை மாவட்டம் முழுவதும் திடீரென இரவு 7 மணி முதல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இதில், மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள மேலவாசல் பகுதியில் உள்ள அம்மா உணவக வாசலில் இருந்த பழமையான வேப்பமரம் ஒன்று திடீரென பலத்த காற்றின் காரணமாக முறிந்து விழுந்தது.

இதனை பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்த வயதான மூதாட்டி ஒருவர் தான் அவ்வப்போது தங்கும் மற்றும் கோவில் அமைந்துள்ள நிழல்தரும் வேப்பமரம் உடைந்து விழுந்ததை எண்ணி சிறு குழந்தை போல, கண்ணீர்விட்டு அழத் தொடங்கினார்.

இதனையடுத்து, மரம் விழுந்த சம்பவம் குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் தீயணைப்புத்துறையினர் வந்து மரத்தை அப்புறப்படுத்தினர்.

https://player.vimeo.com/video/820471107?h=1429c57a63&badge=0&autopause=0&player_id=0&app_id=58479

மதுரை மக்கள் மக்களோடு மட்டுமன்றி மரத்தோடும் பாசமாக இருப்பவர்கள் என்பதை பாட்டியின் கண்ணீர் நிரூபித்தது.

  • ajith praise adhik ravichandran after watching good bad ugly movie என்னைய இப்படி காமிச்சிருக்கியேடா- ஆதிக் ரவிச்சந்திரனிடம் அஜித் சொன்ன GBU விமர்சனம்?