நீட் தேர்வு முடித்து வெளியே வந்த மாணவர்களிடம் நீட் பயிற்சி விளம்பர நோட்டீஸ்.. திமுக அரசுக்கு எதிராக கருத்து!
Author: Udayachandran RadhaKrishnan6 May 2024, 11:23 am
நீட் தேர்வு முடித்து வெளியே வந்த மாணவர்களிடம் நீட் பயிற்சி விளம்பர நோட்டீஸ்.. திமுக அரசுக்கு எதிராக கருத்து!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் உள்ள 4-தனியார் பள்ளிகளில் இன்று சுமார் 1200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் படிப்பிற்கான நுழைவு தேர்வுகளை எழுதினர்.
தேர்வு எழுத சென்ற மாணவர்களை வரவேற்கும் விதமாக அவர்களுடைய பெற்றோர்கள் நீட் தேர்வு எழுதும் மையங்களின் வாசலில் நீண்ட நேரம் காத்து கிடந்தனர்.
நீட் தேர்வை எழுதி விட்டு வெளியே வந்த மாணவர்களிடம் தனியார் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தும் மையங்களில் இருந்து வந்த நபர்கள் சிலர் தங்கள் மையங்களில் நடத்தப்படும் நீட் தேர்வு பயிற்சிகள் குறித்த விளம்பர நோட்டீஸ்களை வழங்கினர்.
நோட்டீஸ்களை பெற்றுக்கொண்ட மாணவர்கள் அதனை தங்கள் பெற்றோர்களிடம் வழங்கிய பொழுது ஆளும் திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவருடைய மகன் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கூறியது போல் தமிழகத்தில் நீட் தேர்வினை என்றும் தடுத்து நிறுத்த முடியாது என்பதற்கு சிறந்த உதாரணமாக நீட் தேர்வு எழுதி விட்டு வெளியே வரும் மாணவர்களிடம் தங்கள் நிறுவனங்களின் விளம்பரம் நோட்டீஸ்களை வழங்கி இருக்கின்றனர் என்று தெரிவித்தனர்.
மேலும் படிக்க: கண்ணதாசனா? எம்எஸ் விஸ்வநாதனா? மீண்டும் வைரமுத்து கிளப்பிய சர்ச்சை..!!!!
மேலும் திமுக அரசு இனிமேல் நீட் தேர்வை நிறுத்தி விடுவோம் என்று பொய் கூறாமல் தனியார் பயிற்சி வகுப்புகளை போல் அரசும் சிறந்த பயிற்சி வகுப்புகளை நடத்தி தமிழக பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்ற வழிவகை செய்ய வேண்டும் என்று கூறி சென்றனர்..