தொடங்கியது நீட் நுழைவுத் தேர்வு : கோவையில் 9 மையங்களில் 7,127 மாணவர்கள் தேர்வை எழுதினர்!!
Author: Udayachandran RadhaKrishnan7 May 2023, 2:45 pm
மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. அதன்படி கோவை மாவட்டத்தில் சரவணம்பட்டி கோயமுத்தூர் பப்ளிக் பள்ளி, புலியகுளம் வித்திய நிவேதான் பப்ளிக் பள்ளி, சரவணம்பட்டி விவேகம் சீனியர் செகண்டரி பள்ளி, வட்டமலை பாளையம் கங்கா நர்சிங் கல்லூரி, ஈச்சனாரி கற்பகம் அகாடமி, சிங்காநல்லூர் எஸ் எஸ் வி எம் கோல்ட் ஸ்கூல், திருச்சி ரோடு ரத்தினம் சுப்பிரமணி கலை அறிவியல் கல்லூரி, சபரி பாளையம் ரோடு கேந்திர வித்யாலயா, நேரு நகர் சுகுணா பள்ளி ஆகிய 9 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது.
7,127 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர்.பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. பிற்பகல் 1.15 மணிக்குள் தேர்வறையில் விண்ணப்பதாரர்கள் அமர வேண்டும் பிற்பகல் 1:30 மணி முதல் 1 45 மணி வரை முக்கிய அறிவுறுத்தல் வழங்கிச் சீட்டு சரிபார்க்கப்படும் பிற்பகல் 1.45 மணிக்கு வினாத்தாள் வழங்கப்படும்.
தமிழ் ஆங்கிலம் ஹிந்தி உள்பட 13 மொழிகளில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்ய மொழியில் தேர்வு எழுதலாம் உலவி சீட்டு அடையாளச் சான்று தவிர வேறு எந்த ஒரு ஆவணங்களும் தேர்வரைக்கும் கொண்டு செல்ல முடியாது.இதில் வழக்கமாக கடைப்பிடிக்கப்படும் அனைத்து கட்டுப்பாடுகளும் கடைபிடிக்கப்படுகிறது.