அரசியல்வாதிகள் Exam எழுதிதான் ஆட்சிக்கு வராங்களா..? பதில் சொல்லுவாரா அண்ணாமலை..? சீமான் எழுப்பிய கேள்வி!

Author: Babu Lakshmanan
23 October 2023, 8:33 pm

3,5,8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை கொண்டு வருவது பிஞ்சு நெஞ்சுக்குள் கல்வி குறித்த வெறுப்பை ஏற்படுத்திவிடும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- திமுக – காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்த போது தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. அதனை பாஜக பிடித்துக் கொண்டது. நீட் தேர்வு சரியான மருத்துவரை உருவாக்குமா..? என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை. அமெரிக்காவிலுள்ள ப்ரோ மெட்ரிக் என்கிற தனியார் நிறுவனம் ஏன் நீட் தேர்வை நடத்துகிறது என அண்ணாமலை விளக்க வேண்டும்.

டாக்டர் ஆக தேர்வு எழுதனும், நீதிபதி தேர்வு எழுதனும், வழக்கறிஞராக தேர்வு எழுதனும், கலெக்டர் மற்றும் போலீசார் ஆக தேர்வு எழுதனும். ஆனால், இவர்களையெல்லாம் கட்டுப்படுத்துகிற ஆட்சியாளர்களாகிய முதல்வர், பிரதமரெல்லாம் என்ன தேர்வு எழுதுகிறார்கள். ஆட்சிக்கு வரக்கூடியவர்கள் எந்த தேர்வும் எழுத தேவையில்லையா?.

கல்வி கட்டமைப்பில் முதலிடத்தில் இருக்கும் தென் கொரியாவில் 8 வயதில்தான் முதல் வகுப்பில் சேர்க்கிறார்கள். ஆனால், இங்கு 8 வயதில் பொதுத் தேர்வு எழுத வேண்டும் என்கிறார்கள். 3,5,8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை கொண்டு வந்தால் பிஞ்சு நெஞ்சுக்குள் கல்வி குறித்த வெறுப்பை ஏற்படுத்திவிடும். கிராமத்தில் இருக்கும் ஒரு மாணவனும், நகரத்தில் நீட் பயிற்சி பெறும் மாணவனும் ஒரே தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்பது ஜனநாயக துரோகம், எனக் கூறினார்.

  • old madurai set work going on for parasakthi movie பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!