நீட் தேர்வில் மாஸ் காட்டிய தமிழக மாணவர்கள்.. 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்று சாதனை..!

Author: Vignesh
5 June 2024, 10:11 am

கடந்த ஆண்டு மே ஐந்தாம் தேதியன்று தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET_UG) நடைபெற்றது. அதன் நுழைவு தேர்வை இந்தியா முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் எழுதி உள்ளனர். இந்த நீட் தேர்வுக்கான முடிவுகள் நேற்று மாலை தேர்வாணையம் வெளியிட்டது. அதில், 13,16,268 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதாவது, 56.41% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இது கடந்த ஆண்டு விட 0.2% அதிகமாகும். தமிழகத்தை பொறுத்தவரை இந்த ஆண்டு ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 920 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். அதில், 89 ஆயிரத்து 426 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வு முடிவுகளில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் புதிய சாதனையை படைத்துள்ளனர்.

neet exam

மேலும் படிக்க: நான் இந்த தேர்தல்ல தோற்றிருக்கலாம்.. ஆனால் நான் இன்னும் தோற்கவில்லை : நம்பிக்கை கொடுத்த கோவை அதிமுக வேட்பாளர்!

அதில், முதலில் தமிழகத்தில் தேர்வது ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 920 மாணவர்கள் மாணவர்களில் 89 ஆயிரத்து 426 (58.47 சதவீதம்) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தமிழகத்தில் ஒரு லட்சத்து 44 ஆயிரத்தி 514 பேர் தேர்வு எழுதி அதில், 78 ஆயிரத்தி 693 (54.45 சதவீதம்) பேர் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

neet exam

மேலும் படிக்க: தேர்தலில் மாஸ் காட்டிய சீமான்.. அள்ளிக் குவித்த வாக்குகள்; அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் கட்சி..!

மேலும், அடுத்ததாக இந்த ஆண்டு வெளியான முடிவுகளில் நாடு முழுவதும் உள்ள 67 மாணவர்கள் முழு மதிப்பெண் எடுத்து முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். அதில், தமிழகத்தில் மட்டும் எட்டு மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதன் மூலம் இந்திய அளவில் ராஜஸ்தானுக்கு 11 மாணவர்கள் பிறகு தமிழகம் இரண்டாம் இடம் பிடித்த சாதனை படைத்துள்ளது.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 234

    0

    0