மீண்டும் அலட்சியம்… துணிக்கடையில் இரும்பு கேட் விழுந்து சிறுமி பலி : தந்தையை காண வந்த போது சோகம்!!
Author: Udayachandran RadhaKrishnan29 January 2023, 10:52 am
சென்னை : கீழ்ப்பாக்கம் அருகே துணிக்கடையின் இரும்பு கேட் விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள துணிக்கடையில் இரும்பு கேட் விழுந்ததில் காவலாளியின் 5 வயது மகள் பலத்த காயம் அடைந்தார். காயம் அடைந்த சிறுமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
காவலாளியாக பணிபுரியும் தனது தந்தையை காண தாயுடன் வந்தபோது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.