தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக அண்டை மாநில பிரமுகர்கள் : தினேஷ் குண்டுராவ் அதிரடி மாற்றம்?!

Author: Udayachandran RadhaKrishnan
6 August 2023, 3:36 pm

வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாநில காங்கிரஸ் நிர்வாகிகளையும் அழைத்து தேசிய தலைவர்கள் பேசி வருகிறார்கள்.
தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் கட்சி மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரை மாற்றுவது தொடர்பான பேச்சுகள் டெல்லியில் எழுந்துள்ளன. தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக இருப்பவர் தினேஷ் குண்டுராவ்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். சமீபத்தில் கர்நாடக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவருக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டு உள்ளது.

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை மந்திரியாக உள்ளார். இதனால் இவரை மாற்றி புதிய பொறுப்பாளரை நியமிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு உள்ளது. புதிய பொறுப்பாளராக கேரளாவைச் சேர்ந்த சுரேஷ் கொடிக்குன்னில் அல்லது ரமேஷ் சென்னிதலா ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

  • kochadaiiyaan movie rerelease soon in theatres ரீரிலீஸுக்கு தயாராகி வரும் ரஜினிகாந்தின் அனிமேஷன் திரைப்படம்! அதுவும் புதுப்பொலிவுடன்…