கன்னத்தில் அறைந்து முதுகில் குத்தினார் HM… தேர்வறையில் நடந்த அசம்பாவிதம் ; மாவட்ட ஆட்சியரிடம் ஓடிவந்த மாணவன்..!!

Author: Babu Lakshmanan
29 April 2023, 11:57 am

நெல்லை ; 10 ம் வகுப்பு மாணவனை சக மாணவனும், ஆசிரியரும் மாறி மாறி தாக்கியதால் உடல் நலம் குன்றி சிரமப்படும் தனது மகனின் பாதிப்புக்குள்ளானதாகக் கூறி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி 10நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை கொக்கிரகுளம் பகுதியை சேர்ந்தவர் பிரசாத், இவரின் மகன் பாரத். பாளையங்கோட்டையில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் 10 வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் பள்ளியில் நடந்த கணித திருப்புதல் தேர்வின்போது தேர்வறையில் அருகில் இருந்த மாணவன் காப்பி அடிக்க தேர்வு எழுதிய பேப்பரை பாரத்திடம் கேட்டு கொடுக்காத நிலையில், அவரின் கழுத்தில் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, தேர்வறையில் இருந்த கண்காணிப்பாளர் காப்பி அடிப்பதை கண்டு இரு மாணவர்களையும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் ஒப்படை்தத நிலையில் ஆசியரியர்களும் பாரத்தை பிரம்பால் அடித்து காயப்படுத்தி தாக்கியதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் மாணவன் பாரத்திற்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு, தொண்டை பகுதியில் நீர் கட்டி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி இதன் பேரில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆசிரியர்களும் அடித்ததில் கால் நடக்க முடியாமல் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது குணமடைந்துள்ளார்.

ஆனால் இச்சம்பவம் தொடர்பாக இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும், மாணவன் பாரத்தை தாக்கிய ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாணவன் பாரத்தின் பெற்றோர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் மனு அளித்துள்ளனர். மாணவர் மற்றும் ஆசிரியர் தாக்கியதில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வையும் பாரத் என்ற மாணவன் எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வருத்தத்துடன் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

  • Ajith Kumar Vidaamuyarchi release date விடாமுயற்சி படத்தின் புது அப்டேட் வந்தாச்சு…பெருமூச்சு விட்ட ரசிகர்கள்..!
  • Views: - 339

    0

    0