மாணவர்களை தாக்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்… வெளியான பரபரப்பு வீடியோ… 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!!

Author: Babu Lakshmanan
10 August 2023, 1:49 pm

நெல்லை பாளையங்கோட்டை பள்ளியில் ஆசிரியர் தாக்கியதாக கூறி பிளஸ்1 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை பாளையாங்கோட்டை பகுதியில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஒன்று (கிறிஸ்துராஜா) செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் பிளஸ்-1 மாணவர்கள் 3 பேர் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆசிரியர் தாக்கியதாக சிகிச்சைக்காக சேர்ந்தனர்.

அப்போது, அவர்களிடம் அங்கு உள்ள புறக்காவல் நிலையத்தில் இருந்த போலீசார் விசாரித்ததில், ஆங்கில பாடத்தில் மதிப்பெண் குறைவாக எடுத்து தோல்வி அடைந்ததால் தங்களை ஆசிரியர் கிங்ஸ்லி தாக்கியதாகவும், அதனை செல்போனில் வீடியோ எடுத்ததற்காக மீண்டும் தனி அறையில் வைத்து ஆசிரியர் தாக்குதல் நடத்தியதில் கண், தொடை, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர வலி இருப்பதாக கூறினர்.

இது தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் ஆசிரியர் கிங்ஸ்லி மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வகுப்பறைக்கு செல்போன் கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாகவும், மாணவரை ஆசிரியர் தாக்கிய விவகாரம் தொடர்பாகவும் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 489

    0

    0