ஓடும் பேருந்தில் பர்தா அணிந்து நகைகளை பறித்த பெண்கள் : கையும், களவுமாக பிடித்து போலீஸில் ஒப்படைத்த பயணிகள்..!!

Author: Babu Lakshmanan
10 February 2023, 7:38 pm

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் ஓடும் பேருந்தில் இஸ்லாமிய பெண்கள் போன்று பர்தா அணிந்து நகைகளை பறித்த இரண்டு பெண்களை கையும், களவுமாக பிடித்து பயணிகள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

திருநெல்வேலி சமாதானபுரத்தில் இருந்து பாளையங்கோட்டை தினசரி சந்தை பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்தில் இரண்டு பெண்கள், இஸ்லாமிய பெண்கள் போன்று பர்தா அணிந்து பேருந்தில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நடந்து கொண்டனர்.

அவர்களை தொடர்ந்து சிலர் கண்காணித்த நிலையில், அவர்கள் வயதான மூதாட்டி இடம் இருந்து நகைகளை பறிக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. சுதாரித்துக் கொண்டு அங்கிருந்த சிலர் 3 பெண்களைப் பிடிக்க முற்பட்டுள்ளனர். அதில் ஒருவர் தப்பி ஓடிய நிலையில் இரண்டு பேரை பிடித்து காவல்துறை வசம் ஒப்படைத்துள்ளனர்.

இரண்டு பேரை பிடித்து தொடர்ந்து காவல்துறை விசாரணை மேற்கொண்டதில், இரண்டு பேரும் சேலம் மாவட்டம் மேட்டுக்குடி பகுதியை சேர்ந்த ஆஷா மற்றும் வாசுகி என்றும் தெரிவித்துள்ளனர். விசாரணையை தொடர்ந்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர்.

இஸ்லாமிய பெண்கள் போன்று பர்தா அணிந்து ஓடும் பேருந்தில் கொள்ளை முயற்சியில் பெண்கள் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 431

    0

    0