மைக்கில் பேசத் தொடங்கிய திமுக மேயர்… காலியான இருக்கைகள் ; சுதந்திர தினவிழாவில் எதிரொலித்த திமுக கோஷ்டி மோதல்..!!

Author: Babu Lakshmanan
15 August 2023, 1:22 pm

திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் தேசியக்கொடி ஏற்றிய பிறகு, திமுக மேயர் பேசத் தொடங்கியவுடன், திமுக கவுன்சிலர்கள் இடத்தை காலி செய்ததால் பரபரப்பு நிலவியது.

திருநெல்வேலி மாநகராட்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த சரவணன் மேயராக உள்ளார். மொத்தமுள்ள 55 வார்டுகளில் திமுக கூட்டணி 51 வார்டுகளில் வெற்றி பெற்று உறுப்பினர்களாக உள்ளனர். மேயருக்கும், மாமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது.


இதனால், மக்கள் நல பிரச்சனைகளில் சரி செய்வதற்கான அனுமதி தருவதற்கு மேயர் காலம் கடத்துவதாகவும், கமிஷன் கூடுதலாக கேட்பதாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சுதந்திர தின நிகழ்ச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது. அங்கு வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் மேயர் சரவணன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தேசிய கொடியை ஏற்றி வைத்து தேசிய கீதம் பாடப்பட்டது. அடுத்து மாமன்ற உறுப்பினர்கள் 40க்கும் மேற்பட்டவர்கள் மேயர் பேசத் துவங்கியவுடன் இடத்தை காலி செய்து வெளியே சென்றனர்.

ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த மேயர் அதே கட்சியை சார்ந்த கவுன்சிலர்கள் இடையேயான மோதல் சுதந்திர தின விழாவிலும் எதிரொலித்தது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 367

    0

    0