நெல்லை மழை வெள்ளத்தில் காணாமல் போன மகனை தேடி தாய் பரிதவித்து வந்த நிலையில் என் ஜி ஓ காலனி அருகே மகன் சடலமாக மீட்கப்பட்டதால் உறவினர்கள் அதிர்ச்சி
நெல்லையில் மூன்று நாட்கள் கொட்டி தீர்த்த கனமழையால் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. மாநகரில் பல்வேறு இடங்களில் குளம், ஏரி போன்ற நீர் நிலைகளில் இருந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால், நகர் பகுதியில் கடும் வெள்ள சேதம் ஏற்பட்டது. குறிப்பாக, தாமிரபரணி ஆற்றில் இருந்து வெளியேறிய தண்ணீர் ஊருக்குள் சென்றதால், வண்ணாரப்பேட்டை, நெல்லை சந்திப்பு போன்ற பகுதிகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளானது.
இந்த நிலையில், நெல்லை ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த சேர்மன் ஆறுமுகக்கனி தம்பதியின் மகன் அருணாச்சலம் (19) என்ற இளைஞர், கடந்த 17ஆம் தேதி தனது பைக்கில் நெல்லை என்ஜிஓபி காலனி வழியாக சென்றுள்ளார்.
அப்போது அப்பகுதியில் உள்ள குளம் ஒன்று நிரம்பி ஊருக்குள் தண்ணீர் சென்றது. சாலை ஓரமாக இருந்த ஓடை முழுவதும் தண்ணீர் சென்றது தெரியாமல். அருணாச்சலம் அந்த ஓடைக்குள் சென்ற வெள்ளத்தில் பைக் உடன் சிக்கிக்கொண்டார்.
அதேசமயம் வீட்டில் இருந்து சென்ற அருணாச்சலம் எங்கு சென்றார்..? என்ன ஆனார் என்ன தெரியாமல், அவரது தாய் கடந்த இரண்டு தினங்களாக பரிதவித்து வந்தார். மேலும் தனது மகனை சோகத்தோடு அவர் தேடுவது போன்ற வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலானது.
இது போன்ற சூழ்நிலையில் என்ஜிஓபி காலனி அருகே உள்ள ஓடையில் இன்று அருணாச்சலம் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று மாலை அருணாச்சலத்தின் பைக் மீட்கப்பட்டுள்ள நிலையில் இன்று அவரது உடல் சுடலமாக மீட்கப்பட்டது. மேலும், இதன் மூலம் நெல்லையில் மழை பாதிப்பால் உயிரிழந்தவரின் எண்ணிக்கை எட்டாக அதிகரித்துள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.