பட்டப்பகலில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு.. தப்பியோட முயன்ற இளைஞர்கள்.. மடக்கி பிடித்த பொதுமக்கள்..!!

Author: Babu Lakshmanan
19 July 2023, 4:27 pm

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பிரபல வழக்கறிஞர் ஜோசப் ராஜஜெகன் என்பவருக்குஅரிவாள் வெட்டு விட்டு தப்பிய வாலிபர்கள் இரண்டு பேரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பிரபல வழக்கறிஞர் ஜோசப் ராஜ ஜெகன் (48). இவருக்கு வள்ளியூர் தெற்கு மெயின்ரோட்டில் வழக்கறிஞர் அலுவலகம் உள்ளது.

இன்று காலை 8.30 மணியளவில் வழக்கம் போல், தனது அலுவலகத்தை திறப்பதற்கு வந்துள்ளார். அப்போது, மறைந்திருந்த இரண்டு வாலிபர்கள் கத்தியால் ஜோசப் ராஜ ஜெகனின் தலையில் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அக்கம்பக்கத்தை சேர்ந்த பொதுமக்கள் இரண்டு பேரையும் தூரத்தி சென்று பிடித்தனர். தலையில் பலத்த காயமடைந்த வழக்கறிஞர் ஜெகனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

பிடிப்பட்ட வாலிபர்கள் திருநெல்வேலி அருகே உள்ள பேரின்பபுரத்தைச் சேர்ந்த பிரவீன் காந்த், கார்த்திக் என்பது தெரிய வந்தது. எதற்காக வெட்டினார்கள் என்பது குறித்து வள்ளியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!