நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி தனியார் பள்ளி இன்று வழக்கம் கோல செயல்பட தொடங்கியது. அந்த சமயம் 8ஆம் வகுப்பு மாணவன் ஒருவரை சக மாணவன் அரிவாளால் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதை பார்த்து தடுக்க சென்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு விழுந்தால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம், உடனே இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அரிவாளால் வெட்டிய மாணவன் பாளையங்கோட்டை போலீசாரிடம் சரணடைந்த நிலையில், விசாரணையில், 4 நாட்கள் முன்பாக மாணவர்கள் இருவருக்கும் பென்சில் கொடுப்பது தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது.
தொடர்ச்சியாக பள்ளி விடுமுறைக்கு பின் இன்று அரிவாளுடன் நுழைந்த மாணவன், இந்த சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்,திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பள்ளி வகுப்பறைக்குள்ளேயே எட்டாம் வகுப்பு மாணவனை சக மாணவன் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தடுக்க வந்த ஆசியரையும் அம்மாணவன் தாக்கியுள்ளதும் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
காயமடைந்த மாணவனும், ஆசிரியரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
தினமொரு கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் மற்றும் சாதிய ரீதியான தாக்குதல் ஆகியவை வரிசை கட்டிக் கொண்டிருக்கும் திரு. ஸ்டாலின் அவர்களின் அலங்கோல ஆட்சியில், பள்ளிச் சிறார்கள் கைகளிலும் பயங்கர ஆயுதங்கள் புழங்குமளவிற்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடப்பது பெரும் ஆபத்தானது.
அதுவும், “பென்சில் கேட்ட தகராறில் தாக்குதல் நடந்துள்ளது” எனக் கூறுகிறார் நெல்லை உதவி காவல் ஆணையர். ஆனால், பென்சிலுக்காக பள்ளிக்குள் அரிவாளை மறைத்து எடுத்துச் சென்று உடன் படிக்கும் மாணவனைத் தாக்குமளவிற்கு நமது பிள்ளைகளின் மனதில் வன்முறை வேர் படர்ந்துள்ளதா என்ற சந்தேகம் தமிழக மக்கள் மத்தியில் வலுக்கிறது.
எனவே, இந்த சம்பவத்தில் உண்மை நிலவரம் என்ன என்பதை முறையாக ஆராய்ந்து அதற்கு தக்க நடவடிக்கைகள் எடுப்பதோடு, இனியும் பள்ளிக் குழந்தைகள் மத்தியில் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நிகழாமலிருக்க தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனவும் முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
கரூர், பஞ்சமாதேவி பகுதியில் பொன்னுச்சாமி என்பவர் புதியதாக கட்டி வரும் வீட்டிற்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்காக சிவாஜி, ராஜேந்திரன், மாயவன் ஆகிய…
This website uses cookies.