கெத்து காட்ட நினைத்து பெட்ரோல் குண்டை வீசி வீடியோ எடுத்த நண்பர்கள்.. வைரலான REELS-ஆல் வந்த ஆபத்து.. சிக்கிய சிலுவண்டுகள்..!!
Author: Babu Lakshmanan8 August 2023, 12:54 pm
நெல்லை ; வள்ளியூரில் பெட்ரோல் குண்டு தயாரித்து சுவற்றில் எரிந்து வெடிக்க வைத்த காட்சியினை ரீல் செய்து வெளியிட்ட ஒரு சிறுவன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பெட்ரோல் குண்டு தயாரித்து அதனை சுவற்றில் எரிந்து வெடிக்க வைத்த காட்சியினை ரீல்ஸ் தயாரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.
அந்த வீடியோ வைரலான நிலையில், வள்ளியூர் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்த சிறுவன் உள்பட இசக்கியப்பன், செல்வன் ஆகிய மூவர் கைது செய்யபட்டுள்ளனர். மேலும், அரவிந்த் என்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வெடிகுண்டு வீசி பழகுவதாக ரீல்ஸ் வெளியிட்ட நிலையில், பல்வேறு சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து சைபர் கிரைம் போலீஸில் புகார் செய்யப்பட்ட நிலையில், இன்று காலை வள்ளியூர் காவல் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ 3 பேரை கைது செய்தார்.
மேலும், தப்பி ஓடிய அரவிந்த் என்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.