நெல்லை சாந்தி நகரில் கார் கம்பெனி ஊழியர் வீட்டில் கதவை உடைத்து 15 சவரன் நகை மற்றும் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் சாந்தி நகர் 27ஆவது தெருவில் குடியிருந்து வருபவர் அபுதாகிர். இவர் டக்கரம்மாள்புரத்தில் உள்ள ஒரு கார் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கேடிசி நகரில் உறவினர் வீட்டிற்கு கடந்த 25ஆம் தேதி சென்று விட்டு நேற்று இரவு தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.
மேலும் தன் வீட்டின் பீரோவில் இருந்த 15 சவரன் நகை இரண்டு லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அபுதாகிர் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
அந்த தகவலின் பேரில் நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் குற்றப்பிரிவு ஆய்வாளர் பொறுப்பு வாசிவம் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். மேலும், மோப்ப நாய் தடவியல் நிபுணர்களும் வீட்டில் கைரேகைகளை சேகரித்தனர்.
இது குறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…
வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…
கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…
தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…
சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மீண்டும் ரஜினி! நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர்-2 திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக…
This website uses cookies.