நெல்லை ; நெல்லையில் பிரபல ரவடியை 6 பேர் கொண்ட கும்பல் சாலையில் ஓடஓட வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியை அடுத்த வாகைகுளம் பகுதியைச் சார்ந்தவர் தீபக் ராஜா (35). இவர் மீது பல்வேறு கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, சாதிய மோதல் தொடர்புடைய பல்வேறு கொலை சம்பவங்களில் இவருக்கு தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், இவர் மறைந்த பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: டாஸ்மாக் பார் கேசியருக்கு அரிவாள்வெட்டு… தடுக்க சென்ற எஸ்.ஐ. மீதும் தாக்குதல் ; இருவர் கைது…!!
இந்த நிலையில், இவர் சட்டக் கல்லூரியில் படிக்கும் பெண் ஒருவரை அடுத்த மாதம் திருமணம் செய்ய இருந்தார். இதற்காக அந்தப் பெண்ணின் நண்பர்களுக்கு திருமண விருந்து அளிப்பதற்காக கேடிசி நகர் பகுதியில் உள்ள பிரபல அசைவ உணவகத்திற்கு சென்றுள்ளனர்.
அனைவரும் உணவருந்தி விட்டு வெளியே வந்த போது அங்கு மறைந்திருந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் உணவக வாசலிலேயே அரிவாளால் கை, முகம், தலை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதனால் படுகாயமடைந்த தீபக் ராஜா இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாளையங்கோட்டை உதவி ஆணையர் பிரதீப் மற்றும் போலீசார் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கடையில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப் பகலில் நடைபெற்ற கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…
சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…
This website uses cookies.