திருநெல்வேலி ; திருநெல்வேலியில் அருகே மேல கருங்குளம் கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைக்கப்பட்டு கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மேலப்பாளையம் அருகில் உள்ள மேலக்கருங்குளம் கிராமத்தில் விவசாய தோட்டங்கள் அதிகம் இருக்கும் இப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக நாய்கள் அதிகமாக வளர்க்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் பல வீடுகளில் நாய்கள் காணவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, இன்று காலையில் மேலக்கருங்குளம் ஊர் முழுவதும் ஆங்காங்கே 20க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து கிடத்தன. இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பல நாய்கள் நீர் நிலைகளில் இறந்து கிடப்பதால் விஷம் நீரில் கலந்திருக்கும் அபாயம் ஏற்பட்டள்ளது. அதை மற்ற விலங்குகள் அருந்தும் முன் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், உயிரிழந்த நாய்களை போஸ் மார்டம் செய்து விஷம் வைத்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
எம்புரானுக்கு வந்த வம்புகள் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான “L2 எம்புரான்”…
தற்போதைய கால சூழலில் சிறு வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படுவது சகஜமாக மாறி வருகிறது. இதனால் இளைஞர்கள் பலர் வெளியில் சென்றிருக்கும்…
பிக்பாஸ் தர்ஷன் திடீர் கைது… பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் தர்ஷன். இலங்கையை…
தூத்துக்குடி பாத்திமா நகர் 6வது தெருவை சேர்ந்தவர் ராஜ் (56) மீன்பிடித் தொழில் செய்து வரும் இவர் தற்போது மகிழ்ச்சிபுரம்…
திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி…
This website uses cookies.