வெகுவிமர்சையாக நடந்த நெல்லையப்பர் கோவில் தெப்பத்திருவிழா : சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்பாள்!!
Author: Babu Lakshmanan7 February 2023, 8:58 am
நெல்லை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற நெல்லையப்பர் திருக்கோவில் தைப்பூச திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்பதிருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை மாவட்டம் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருகோவில் தைப்பூச திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதற்காக கோவிலிலிருந்து சுவாமி சன்னதி தெருவில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளினர். அங்கு சுவாமி அம்பாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று மஹாதீபாரதனை நடைபெற்றது.
அதன் பின்னா் சந்திர புஷ்கரணி என்ற வெளித் தெப்பத்தில் அலங்காிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளினா்.
அதனை தொடா்ந்து, வேதம் சிவாகமம் வேதவிற்பனா்கள் பாடவும் திருமுறை ஒதுவாமூர்த்திகள் விண்ணப்பம் செய்யவும் மங்கலவாத்யங்கள் இசைக்கவும் தெப்பம் 11 சுற்றுக்கள் வலம் வந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.