நெல்லை மாநகராட்சி பிரச்சனை ஓவர்? மேயர் சரவணன் ராஜினாமா செய்தது உண்மையா? வெளியான தகவல்!!
Author: Udayachandran RadhaKrishnan2 July 2024, 11:07 am
நெல்லை மாநகராட்சியில் திமுக மேயராக இருந்து வருபவர் பி.எம்.சரவணன். இவரது தலைமையில் மாநகராட்சி கூட்டம் நடத்துவதில் ஒவ்வொரு மாதமும் பிரச்சினைகள் நிலவி வருகிறது.
சமீபத்தில் மாநகராட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில் திமுக கவுன்சிலர்களே போதிய எண்ணிக்கையில் கலந்து கொள்ளாததால் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மேயர் பி.எம்.சரவணன் சென்னைக்கு சென்று இருப்பதாகவும், அங்கு கட்சி தலைமையிடம் தனது பதவியை ராஜினாமா செய்வதற்குரிய கடிதத்தை வழங்கி இருப்பதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியானது.
சமூக வலைதளங்களிலும் இந்த தகவல் வெளியானது. ஆனால் அவர் உண்மையிலேயே ராஜினாமா கடிதம் கொடுத்து உள்ளாரா? அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன? என்பதை உறுதி செய்யமுடியவில்லை. இதனால் நெல்லை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.