மகளின் தவறான தொடர்பை பற்றி கூறிய அக்கா மகனை அடித்தே கொன்ற தாய்மாமன் : தலைமறைவான அத்தையை தேடும் போலீஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 May 2022, 6:53 pm

வேலூர் : பாலிடெக்னிக் மாணவணை உண்மையை சொல்லியதற்காக தாய்மாமன் குடும்பத்தார் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

பெங்களூரை சேர்ந்த ஜெய்சங்கர் நாயுடு மகன் தருண் குமார் (வயது 20). இவர் காட்பாடி அடுத்த சின்ன லத்தேரியில் உள்ள அவரது தாய் மாமா ரமேஷ் (வயது 45 ) என்பவர் வீட்டில் தங்கி தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் ரமேஷின் மகள் வேறு யாருடனோ போனில் பேசுவதாக தருண்குமார் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் தருண்குமாரை தாக்கினார். இதுபற்றி அவர் பெங்களூரில் உள்ள அவரது பெற்றோரிடம் தெரிவித்தார்.

தருண்குமாரின் தாயார் கிரிஜா லத்தேரிக்கு வந்து மகனை தாக்கியது குறித்து அவரது சகோதரர் ரமேஷிடம் தட்டிக் கேட்டார். இதனால் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ், ரமேஷின் மனைவி சதிஷ்வரி (வயது 38) மகன் நவின் (வயது 16) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தருண்குமாரையும் அம்மா கிரிஜா, ஆகியோரை தென்னை மட்டையால் சராமாரியாக தாக்கியுள்ளனர். அப்பகுதி மக்கள் தடுத்தும் தாக்கிக் கொண்டே இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து அனைவரையும் சமாதானப்படுத்தினர்.

இதில் படுகாயமடைந்த தருண் குமாரை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி தருண் குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து லத்தேரி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர்.

தலைமறைவாக இருக்கும் ரமேஷின் மனைவி சதீஷ்வரி மகன் நவீன் இருவரையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். தொடர்ந்து அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தருண் குமாரின் தாயார் கிரிஜா ரமேஷின் மனைவி சதீஷ்வரி நவீன் ஆகிய இருவரும் கைது செய்யாமல் உடலை எடுக்க மாட்டோம் என்று கூறினர்.

இறந்த மாணவன் அருண்குமார் உடன் பயின்ற பெங்களூரு மாணவர்கள் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் நண்பரின் உடலைப் பார்த்து கண்ணீர் விடும் காட்சி அப்பகுதியில் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.

  • Surya Clash With Ajith அஜித்துக்கு எதிராக களமிறங்கும் சூர்யா.. ஒரு கை பார்க்க முடிவு!!
  • Views: - 988

    0

    0