அந்த கூட்டத்தை மதுரைக்குள்ள நுழைய விடமாட்டோம் : வைகோ ஆவசேம்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 January 2025, 5:00 pm

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அரிட்டாபட்டி, வல்லாளபட்டி, புளிப்பட்டி உள்ளிட்ட பத்திற்கு மேற்பட்ட கிராம பகுதியில் சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு வேதாந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் சிங்க் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதனை எதிர்த்து மேலூர் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தொடர்ந்து பல்வேறு கட்டமாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பகுதி மக்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் இன்று மேலூரில் மதிமுக தலைவர் வைகோ, இந்த பகுதி மக்களுக்கு ஆதரவு தெரிவித்து டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை எதிர்த்து கண்டன கூட்டத்தில் பேசினார்.

இதில் பேசிய வைகோ அணில் அகர்வால் கூட்டத்தினை மதுரை மண்டலத்திற்கு நுழைய விட மாட்டோம் எனவும் தமிழக மண்ணை பாதுகாக்கும் சூழலில் எங்கள் அணியினர் முழுமையாக நின்று எதிர்த்து பாதுகாப்போம் எனவும் பேசினார்.

Never Allowed that team in Madurai Says Vaiko

மேலும் ஸ்டெர்லைட் ஆலை, நியூட்ரினோ உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு போராடிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் இதேபோன்று, 3000 ஆண்டு பழமையான பாரம்பரியமிக்க அரிட்டாபட்டி உள்ளிட்ட தொன்மையான கிராமங்கள் மற்றும் இந்த பகுதி விவசாயிகளை பாதுகாக்கவும், தொடர்ந்து பல்வேறு கட்டமாக போராட இருப்பதாகவும் பேசினார். இதில் ஆயிரக்கணக்கான மதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர்

  • Padayappa celebrates Rajinikanth’s 50 years சினிமாவில் 50 ஆண்டு சாதனை…ரீரிலீஸில் குதிக்கும் ரஜினியின் சூப்பர் ஹிட் திரைப்படம்…!
  • Views: - 99

    0

    0

    Leave a Reply