நெஞ்சே பதறுது.. பிறந்த சிசுவை பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து தூக்கி வீசிய கொடூரம்!

Author: Udayachandran RadhaKrishnan
5 November 2024, 2:30 pm

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் பிறந்த சில நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலில் அடைக்கப்பட்டு சடலமாக தென்னந்தோப்பில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகில் உள்ள ஆண்டிக்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் உள்ள குணபாலன் என்பவரது தென்னந்தோப்பில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுக்குள் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை திணிக்கப்பட்டு கிடந்துள்ளது.

தோப்பிற்கு வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையும் படியுங்க: நடிகை கஸ்தூரியை கைது பண்ணுங்க… குவியும் புகார் ; திணறும் போலீசார்.!!

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் குழந்தையின் சடலத்தை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தையை தென்னந்தோப்பில் வீசி சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • sundar c openly talks about nayanthara in mookuthi amman sets நயன்தாரா இப்படிலாம் செய்வாங்கனு எதிர்பார்க்கல- உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி!