கோவை வாகன ஓட்டிகளுக்கு குட்நியூஸ்… சாய்பாபா காலனிக்கு வருகிறது புதிய மேம்பாலம்… டெண்டர் ஒதுக்கீட்டு பணிகள் நிறைவு

Author: Babu Lakshmanan
21 December 2023, 8:27 pm

சென்னைக்கு அடுத்தபடியாக மக்கள் தொகை அதிகமுள்ள நகரம் கோவை மாநகரம் தான். இதனால், சாலைகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தே காணப்படும். இதற்கு தீர்வு காணும் வகையில் தமிழக அரசும் கோவை மாநகரில் அடுத்தடுத்து மேம்பாலங்களை கட்டி வருகின்றன.

கோவை – மேட்டுப்பாளையம் சாலையில், கவுண்டம்பாளையம், கவுண்டர் மில்ஸ், பெரியநாயக்கன் பாளையம் ஆகிய 3 இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. அதேபோல, உக்கடம் – ஆத்துப்பாலம் சாலையில் மேம்பாலக் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. காந்திபுரம் மற்றும் 100 அடி சாலையிலும் மேம்பாலங்கள் கட்டப்பட்டு போக்குவரத்து நெரிசல் இல்லாத பயணத்திற்கு தமிழக அரசு வழிவகுத்துள்ளது.

கோவை மாவட்டத்தின் மிக நீண்ட பாலமாக உப்பிலி பாளையம் – கோல்டுவின்ஸ் வரையிலான மிக நீண்ட பாலம் கட்டப்பட்டு வருகிறது. இது கோவை மக்களுக்கு நல்ல பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியாக கோவை மாநகரின் சாய்பாபா கோவில் பகுதி இருந்து வருகிறது. அதனை குறைக்கும் விதமாக, பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த டெண்டர் பிரபல கட்டுமான நிறுவனமான KCP Infra Limited நிறுவனம் எடுத்துள்ளது.

ரூ.46 கோடி செலவில் மொத்தம் 1.14 கிலோ தொலைவில் அமைக்கப்பட உள்ளது. 2 ஆண்டுகளுக்குள் இந்தக் கட்டுமானப் பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் கோவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 528

    0

    0