இனி TRAFFIC இருக்காது… திறந்தாச்சு உக்கடம் மேம்பாலம் : பயணம் செய்து பார்வையிட்ட CM ஸ்டாலின்!

Author: Sudha
9 August 2024, 3:19 pm

கோவை மாநகரில் இருந்து பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு செல்லக் கூடிய பிரதான சாலைகளை இணைக்கும், ஆத்துப்பாலம்-உக்கடம் இடையேயான சாலை மிகுந்த போக்குவரத்து நெரிசலுடன் இருந்து வந்தது.

இந்நிலையில் தமிழக நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஆத்துபாலத்தில் இருந்து உக்கடம் வரை சுமார் 3.8 கிலோமீட்டர் தொலைவிற்கு 481.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தது.

கடந்த 2018 -ல் துவங்கப்பட்ட பணிகள் சற்று மந்தமாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக மேம்பாலம் கட்டும் பணிகள் வேகமாக நடைபெற்று தற்போது இப்பணி நிறைவடைந்து உள்ளது.

இந்த உக்கடம் மேம்பாலத்தினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் அப்பாலத்தின் வழியாகச் சென்று அதனை பார்வையிட்டார்.இந்த நிகழ்ச்சிகள் தமிழக அமைச்சர்கள் அன்பில் மகேஷ், முத்துசாமி, ஏ.வ.வேலு, பொன்முடி, மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!