பூஜை போட்டுட்டு ஒரே ஒரு அழுத்து… நேராக கோவிலுக்குள் சீறிப்பாய்ந்த புது கார் ; வைரலாகும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!!

Author: Babu Lakshmanan
8 May 2024, 12:05 pm

கடலூரில் புதிய காருக்கு பூஜை போட கோவிலுக்கு சென்ற பொழுது, பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலேட்டரை உரிமையாளர் அழுத்தியதால் கோவிலுக்குள் பாய்ந்த கார், சுவற்றில் மோதி சேதம் அடைந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அரியலூர் மாவட்டம் பெரிய கிருஷ்ணாபுரம் பகுதியைச் சார்ந்தவர் சுதாகர். இவர் தான் புதிதாக வாங்கிய காரை ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள பூவராக சுவாமி கோவிலில் பூஜைக்காக கொண்டு வந்தார்.

மேலும் படிக்க: ‘இந்தா சாவி போட்ட உடனே திறந்திடுச்சு’… நைசாக பைக்கை திருடிய வாலிபர்கள் ; சிசிடிவி காட்சியை வைத்து விசாரணை!!

பின்னர் பூஜை முடிந்ததும் காரை இயக்கிய போது, பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் ஆலயத்தில் உள்ள பாய்ந்து சென்று நூற்றுக்கால் மண்டபத்தின் மீது மோதி கார் முழுவதும் சேதம் அடைந்தது. இதனைப் பார்த்த அருகிலிருந்த பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

இந்த விபத்தில் காரின் உரிமையாளர் சுதாகர் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!