சிறையில் இருக்கும் சவுக்கு சங்கர் மீது பாய்ந்த புதிய வழக்கு!

Author: Hariharasudhan
20 December 2024, 9:53 am

தூய்மைப் பணியாளர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக சிறையில் உள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் மீது மீண்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சென்னை: தமிழ்நாடு காவல்துறை மற்ரும் பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக பதியப்பட்ட வழக்கில், பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கடந்த மே 4ஆம் தேதி தேனியில் வைத்து கைது செய்யப்பட்டார். அப்போது, சவுக்கு சங்கரின் காரில் கஞ்சா வைத்திருந்ததாக அவர் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து, இந்த வழக்கு மதுரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இதனால், இந்த வழக்கு விசாரணையின் போது சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி வந்தார். ஆனால், கடந்த சில விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை.

இதையடுத்து, மதுரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமல செல்வன், சவுக்கு சங்கரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை அடுத்து, சென்னையில் வைத்து சவுக்கு சங்கரை தேனி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Savukku shankar new case registered

குண்டர் சட்டம்: இது மீண்டும் பரபரப்புக்கு உள்ளானது. இந்த நிலையில், தற்போது மேலும் ஒரு வழக்கில் சவுக்கு சங்கர் மீண்டும் சிறையில் இருந்தவாறே கைது செய்யப்பட்டு உள்ளார். இதன்படி, தூய்மைப் பணியாளர், தமிழக அரசின் திட்டம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்டுப் பேசியதாக மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: அஜித் பாணியில் அட்லீ செய்த நெகிழ்ச்சியான செயல்…குவியும் பாராட்டுக்கள்..!

முன்னதாக, சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது. எனவே, இந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவரது தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதன் மீது நடைபெற்ற விசாரணையின் முடிவில், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ