6 மாதம் வெயிட் பண்ண முடியாது.. உடனே விவாகரத்து கொடுங்க.. கிரிக்கெட் வீரர் மனைவி அடம்!
Author: Udayachandran RadhaKrishnan20 March 2025, 2:44 pm
விவாகரத்துக்காக 6 மாதம் எல்லாம் வெயிட் பண்ண முடியாது உடனே கொடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் மனைவி மனு அளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் சாஹல் – நடன இயக்குநரான தனஸ்ரீ என்பவரை 2020ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்கள் தற்போது விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே திருமணத்திற்கு பின், பல ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக தனஸ்ரீ புகைப்படம் எடுத்ததுதான் காரணம் என கூறப்படுகிறது.
மேலும் சாஹலின் நண்பர்களுடனேயே தனஸ்ரீ நெருக்கமாக இருப்பதாக இணையத்தில் போட்டோக்கள் வெளியானது. இதனால் இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
தற்போது நீதிமனற்தில் விவாகரத்து வழக்கு நடந்து வரும் நிலையில், ஐபிஎல் போட்டி நடக்க உள்ளதால் வழக்கை விரைவா முடிக்க வேண்டும் என சாஹல் தரப்பு நாடியுள்ளனர்.
ஆனால் நீதிமன்றமோ, விவாகரத்து வழக்கை உடனடியாக முடிக்க முடியாது, 6 மாத கால அவகாசம் கொடுப்போம். இருவரும் மனம் மாறினால் சேர்ந்து வாழலாம் என நீதிமன்றம் கூறியது.
ஆனால் சாஹல் மற்றும் தனஸ்ரீ தரப்பினர் மனம் ஒத்து போய் தான் இந்த முடிவை எடுத்துள்ளோம். எனவே விவகாரத்தை சீக்கிரமாக வழங்க வேண்டும், 6 மாதம் காலம் வேண்டாம் என கூறியுள்ளனர்.
இதையடுத்து குடும்பவியல் நீதிமன்றம் முடிவெடுக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் ஜீவனாம்சாமாக ரூ.4.75 கோடி வழங்க சாஹல் சம்மதித்துள்ளார். இதில் 2.37 கோடி ஏற்கனவே கொடுக்கப்ப்டடு விட்டது, மீதி தொகை விவாகரத்து முடிவுக்கு வந்த பிறகு கொடுக்கப்படும் என கூறப்படுகிறது.