₹71 கோடியில் கோவையில் புதிய மேம்பாலம்… எப்போது திறப்பு? பொதுமக்களுக்கு வந்த குட் நியூஸ்!

Author: Udayachandran RadhaKrishnan
19 September 2024, 8:23 pm

கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் சாலையில் இருக்கக்கூடிய சாய்பாபா காலனியில் புதிய மேம்பாலம் கட்டும் பணியானது விரைவில் தொடங்கப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இதற்காக கோவை நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்த 2022-ம் ஆண்டு 4 வழிச்சாலை மேம்பாலத்திற்கு அனுமதி வழங்கியது. இதனைத்தொடர்ந்து 1.2 கிமீ தூரத்திற்கு இந்த மேம்பாலம் அமைக்கப்படும் என்று தகவல் வெளியானது.

இதற்காக சுமார் 71 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் கங்கா மருத்துவமனை அருகே தொடங்கி கோவை சாய்பாபா காலனி பேருந்து நிலையத்தில் முடிவடையும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதில் முதல்கட்டமாக சாய்பாபா காலனி சந்திப்பில் மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன. அழகேசன் சாலை சந்திப்பு முதல் எருகம்பெனி சந்திப்பு வரை சுமார் 1 கி.மீ தொலைவுக்கு (975 மீட்டர்), 16.61 மீட்டர் அகலத்துக்கு மேம்பாலம் கட்டப்பட உள்ளது.

15 முதல் 20 தாங்கு தூண்கள் அமைக்கும் பகுதியில் பணிகள் தொடங்கியுள்ளது. இதற்காக இரண்டு பகுதிகளிலும் 7 மீட்டர் அகலத்தில் போக்குவரத்துக்கு வழி விடப்பட்டுள்ளது

வரும் 2026ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்குள் முடிக்க கட்டுமானப் பணியை முடிக்க திட்டமிட்டுள்ளனர். இது தவிர மேட்டுப்பாளையம் சாலை சங்கனூர் பாலம் பகுதியில் ரவுண்டானா உடன் கூடிய மேம்பாலம் அமைக்கவும், சிங்காநல்லூர், சத்தி ரோடு – துடியலூர் சந்திப்பில் மேம்பாலங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!